சாம்சுங் அறிமுகம் செய்யும் மற்றுமொரு 5G ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
9Shares

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சாம்சுங் ஆனது வழமை போன்று இவ் வருடமும் அடுத்தடுத்து புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த வரிசையில் தற்போது Galaxy A42 5G எனும் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

6.6 அங்குல அளவுடையதும், Super AMOLED தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான தொடுதிரை இக் கைப்பேசியில் தரப்பட்டுள்ளது.

அத்துடன் Dual 2.2GHz + Hexa 1.8GHz Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 1TB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.

இவற்றுடன் 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், தலா 5 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என 4 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 349 பவுண்ட்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்