அடுத்த வாரம் அறிமுகமாகின்றது Motorola Razr 5G

Report Print Givitharan Givitharan in மொபைல்
12Shares

உலகத்தரம்வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் நிறுவனங்களுள் ஒன்றான Motorola அடுத்தவாரம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது.

Motorola Razr 5G எனும் இக் கைப்பேசியானது மடிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இதன்படி 6.2 அங்குல அளவு, 2142 x 876 Pixel Resolution உடைய பிரதான திரையினையும், 2.7 அங்குல அளவு, 800 x 600 Pixel Resolution உடைய இரண்டாம் நிலை திரையினையும் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 765G processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவை தவிர 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 2800 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியினை Flipkart தளத்தில் கொள்வனவு செய்ய முடிவதுடன், விலையினையும் எதிர்வரும் 5 ஆம் திகதி அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்