iPhone 12 அறிமுகம் செய்வதில் தாமதம்: வெளியான புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் பொதுவாக தனது ஐபோன் சாதனங்களை ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்திலேயே அறிமுகம் செய்து வருகின்றது.

எனினும் இவ் வருடம் உலகளவில் ஏற்பட்ட கொரோனா தொற்று நிலமை காரணமாக சற்று தாமதம் ஏற்படும் என ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது.

அதன் பின்னர் செப்டெம்பர் மாதத்திலே குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இப்படியிருக்கையில் தற்போது வெளியாகியுள்ள மற்றுமொரு தகவலின்படி அடுத்த மாதம் 13 ஆம் திகதியே iPhone 12 கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அக்டோபர் 16 ஆம் திகதி முதல் முற்பதிவு செய்துகொள்ள முடியும் எனவும், 23 ஆம் திகதி முதல் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆப்பிள் நிறுவனம் 4 வகையான iPhone 12 கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்