இன்று உலகின் அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக அன்ரோயிட் காணப்படுகின்றது.
கூகுள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும் இவ் இயங்குதளத்தின் 11 வது பதிப்பு இவ் வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அன்ரோயிட் 11 எனும் இப் பதிப்பின் சோதனைப் பதிப்பான பீட்டா பதிப்புக்கள் சில ஏற்கணவே வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது இறுதி பீட்டா பதிப்பினை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அதாவது பீட்டா 3 பதிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் அன்ரோயிட் 11 அசல் பதிப்பானது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என் நம்பிக்கை பயனர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.