மடிக்கக்கூடிய கைப்பேசியினை அறிமுகம் செய்யும் கூகுள்: எப்போது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் மற்றும் ஹுவாவி நிறுவனங்கள் ஏற்கணவே மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இவற்றில் சாம்சுங் அறிமுகம் செய்த கைப்பேசிகளை வெற்றிகரமாக விற்பனையாகி வருகின்றன.

இக் கைப்பேசிகள் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற ஆரம்பித்துள்ளன.

அத்துடன் அடுத்தடுத்து 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி Pixel வகை கைப்பேசி ஒன்றினை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அளவில் கூகுள் அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இரு வகையான 5G கைப்பேசிகளை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்