சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது.
Galaxy A71 5G எனும் குறித்த கைப்பேசியானது 6.7 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Samsung Eynos 980 mobile processor , பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
மேலும் 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்கள் மற்றும் தலா 5 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தமாக 4 பிரதான கமெராக்களைக் கொண்டுள்ளது.
இவற்றுடன் 4500mAh அதிவேக சார்ஜ் ஆகக்கூடிய மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.
இக் கைப்பேசியின் விலையானது 630 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.