ஐபோன் பாவனையாளர்களுக்கு கூகுள் நிறுவனத்தின் நற்செய்தி

Report Print Givitharan Givitharan in மொபைல்

கூகுள் நிறுவனமானது ஐபோன்களுக்கான Smart Lock அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.

இதில் ஐபோன் பாவனையாளர்கள் தமது கூகுள் கணக்கினை அன்லாக் செய்வதற்கான வசதி தரப்பட்டுள்ளது.

அதாவது Built in Security கீயினை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இது தொடர்பான டுவிட்டர் கேள்வி ஒன்றிற்கு கூகுள் நிறுவனத்தில் பணியாற்றுபவர் ஒருவர் பதிலளித்தும் உள்ளார்.

குறித்த அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவியதும் ஒரு கணக்கினை தெரிவு செய்து Built in Security கீயினை உருவாக்க வேண்டும்.

தொடர்ந்து ஐபோன் ஆனது கூகுளின் புதிய வசதியினை ஏற்க ஆரம்பித்துவிடும்.

இதன் பின்னர் கூகுள் கணக்கினுள் உள்நுழையும்போது ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு செய்தி ஐபோனில் காண்பிக்கப்படும்.

எனவே அனுமதியை ஏற்றுக்கொள்ள முடியும் இல்லது மறுக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்