அன்ரோயிட் கைப்பேசிகளில் அதிரடி மாற்றம்: இந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு மாத்திரம்

Report Print Givitharan Givitharan in மொபைல்

கூகுள் நிறுவனத்திற்கு எதிராக அண்மையில் 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இணைய தேடுபொறி தொடர்பான போட்டி எதிர்ப்பு நடைமுறைகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் இந்த தண்டப்பணத்தை செலுத்த உத்தரவிட்டிருந்தது.

இதனை அடுத்து கூகுள் நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளது.

இதன்படி ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களுக்கு 4 இணைய தேடுபொறிகள் அன்ரோயிட் சாதனத்தில் தரப்படவுள்ளன.

அவற்றில் ஏதாவது ஒன்றினை தமது முதன்மை தேடுபொறியாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இவற்றில் DuckDuckGo, info.com என்பனவும் அடங்குகின்றன.

ஏனையவை கூகுள் குரோம் மற்றும் Microsoft Bing என்பனவாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து இம்மாற்றம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்