இன்றிலிருந்து இவ் கைப்பேசிகளில் வாட்ஸ் ஆப் இயங்காது

Report Print Givitharan Givitharan in மொபைல்

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷன் ஆனது அனைத்துவிதமான கைப்பேசிகளிற்குமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் கடந்த காலங்களில் சில கைப்பேசிகளுக்கான அப்டேட்களை வெளியிடுவது நிறுத்தப்பட்டு வந்தது.

இந்த வரிசையில் தற்போது விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கைப்பேசிகளிற்கான அப்டேட் முற்றாக நிறுத்தப்படவுள்ளது.

அது மாத்திரமன்றி இன்றைய தினத்திலிருந்து குறித்த கைப்பேசிகளில் வாட்ஸ் ஆப் ஆனது செயற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷன் ஆனது மைக்ரோசொப்ட் ஸ்டோரிலிருந்து நீக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது அன்ரோயிட் மற்றும் iOS இயங்குதளங்களில் பழைய பாதிப்புக்களைக் கொண்ட கைப்பேசிகளில் நிறுத்தப்பட்டதைப் போன்றே தற்போது விண்டோஸ் கைப்பேசிகளிலிருந்தும் நிறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...