ஐபோன் பாவனையாளர்களுக்கு ஓர் அட்டகாசமான செய்தி

Report Print Givitharan Givitharan in மொபைல்

கூகுள் நிறுவனமாது iOS சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஐபோன்கள் மற்றும் அன்ரோயிட் கைப்பேசிகள் என்பவற்றிற்காக கூகுள் மேப் செயலியை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

எனினும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது பயனர்களின் Location History ஐ சேமித்து வைக்கக்கூடியதாக இருக்கின்றது.

இதனை பயனர்கள் ஒரு அசௌகரியமாக கருதுகின்றனர்.

இதன் காரணமாக கூகுள் இதற்கு மாற்று வசதி ஒன்றினை கூகுள் மேப்பில் வழங்கியிருந்தது.

அதாவது கூகுள் மேப் ஆனது Incognito Mode இல் பயன்படுத்தப்படும்போது Location History ஐ சேமிக்காது.

இவ் வசதியினை கடந்த மாதம் அன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் மேப்பில் அறிமுகம் செய்திருந்தது.

தற்போது ஐபோன்களுக்காகவும் அறிமுகம் செய்துள்ளது.

இதனால் பயனர்கள் எவ்வித தயக்கமோ அல்லது பயமின்றி அன்ரோயிட் சாதனங்களில் மாத்திரமன்றி ஐபோன்களிலும் கூகுள் மேப்பினை பயன்படுத்த முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...