அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Huawei Nova 6

Report Print Givitharan Givitharan in மொபைல்
93Shares

ஹுவாவி நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Nova 6 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 6.57 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடையதும் FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான IPS LCD திரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Kirin 990 mobile processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் 32 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்களை உடைய டுவல் செல்ஃபி கமெரா மற்றும் 40 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மூன்று பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.

இதேவேளை 4G தொழில்நுட்பம் மற்றும் 5G தொழில்நுட்பம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு இரு பதிப்புக்கள் வெளிவரவுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியின் விலையானது 454 டொலர்களாகளாகும்.

geeky-gadgets

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்