சாம்சுங் நிறுவனம் இவ் வருடம் மடிக்கக்கூடிய திரையினைக் கொண்ட Galaxy Fold எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இக் கைப்பேசிக்கு உலகளவில் சிறந்த வரவேற்பு காணப்பட்டது.
எனினும் இதன் விலையானது மிகவும் அதிகமாகும்.
அதாவது ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த iPhone 11 Pro Max கைப்பேசியினை விடவும் அதிகமான விலையினைக் கொண்டிருந்தது.
இந்நிலையில் அடுத்த வருடம் Galaxy Fold 2 எனும் மற்றுமொரு மடிக்கக்கூடிய திரையினைக் கொண்ட கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன் விலையானது 1000 டொலர்களை விடவும் குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.
மேலும் கொரியாவில் மாத்திரம் சுமார் ஒரு மில்லியன் Galaxy Fold 2 கைப்பேசியினை விற்பனை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.