5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகியது சாம்சுங் Galaxy W20

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனமாது Galaxy W20 எனும் புத்தம் புதிய 5G கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது Samsung Galaxy Fold கைப்பேசியின் மற்றுமொரு பதிப்பாகும்.

இது Qualcomm Snapdragon 855+ processor, பிரதான நினைவகமாக 12GB RAM, 512GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.

இதன் திரையானது 7.3 அங்குல அளவுடையதாகவும், 2152 x 1536 Pixel Resolution கொண்டதாகவும் இருப்பதுடன் AMOLED தொழில்நுட்பத்தினால் ஆனது.

மேலும் இதன் இரண்டாம் நிலை திரையானது 4.6 அங்குல அளவுடையதாகவும் இருக்கின்றது.

எனினும் இன் விலை உட்பட கமெராக்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

எவ்வாறெனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஊடகவிலாளர் மாநாட்டில் இக் கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்