அடுத்தவருடம் அறிமுகமாகும் புதிய iPhone SE 2: விற்பனையில் இமாலய இலக்கு நிர்ணயிப்பு

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் iPhone SE எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

பொதுவாக ஐபோன்கள் விலை கூடியவையாகும்.

இதனால் அனைவரும் வாங்கக்கூடியதாக சற்று குறைந்த விலையில் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிலும் iPhone SE 2 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது ஆப்பிள்.

அத்துடன் இதில் சுமார் 20 மில்லியன் கைப்பேசிகளை விற்பனை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் 30 மில்லியன் வரையான iPhone SE 2 கைப்பேசிகளை விற்பனை செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கைப்பேசியின் விலையானது ஏறத்தாழ 399 டொலர்கள் வரை இருக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்