வாட்ஸ் ஆப்பில் புதிய ஈமோஜிக்கள்: ஆனால் இக் கைப்பேசிகளில் மாத்திரமே பயன்படுத்த முடியும்

Report Print Givitharan Givitharan in மொபைல்

இன்று உலக அளவில் பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

இவ்வாறான சிறப்பினைக் கொண்ட குறித்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2.19.315 எனும் புதிய வாட்ஸ் ஆப் பதிப்பில் உள்ள ஈமோஜிக்களுக்கு மேலதிகமாக சில புதிய ஈமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தவிர ஏற்கனவே உள்ள சில ஈமோஜிக்கள் அப்டேட் செய்யப்பட்டும் உள்ளன.

இதன்படி 230 வரையான ஈமோஜிக்களை அன்ரோயிட் பயனர்கள் தற்போது பயன்படுத்த முடியும்.

எனினும் iOS சாதனங்களை பயன்படுத்துபவர்கள் தற்போது இவற்றினைப் பயன்படுத்த முடியாது.

இந்நிலையில் iOS சாதனங்களுக்கான புதிய வாட்ஸ் ஆப் பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்