வட்டி இன்றி தவணைக் கட்டணத்தில் ஐபோன் வாங்கலாம் வாங்க

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் ஆப்பிள் கார்ட் எனும் தனது கிரடிட் கார்ட்டினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இக் கார்ட்டினைப் பயன்படுத்தி மாதத் தவணைக் கட்டணத்தில் ஐபோன்களைக் கொள்வனவு செய்ய முடியும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஐபோன்கள் மிகவும் விலை உயர்ந்தவையாகும்.

இதனால் ஒரே தடவையில் முழுப் பணத்தையும் செலுத்தி ஐபோன்களை வாங்குவது பலருக்கு எட்டாக் கனியாகும்.

எனவே புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் கார்ட் இவ்வாறானவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகக் காணப்படுகின்றது.

இக் கார்ட்டினைப் பயன்படுத்தி அதிகபட்சமாக 24 மாத வட்டி இன்றிய தவணைக் கட்டண முறையில் கொள்வனவு செய்ய முடியும்.

அத்துடன் இவ்வாறு கொள்வனவு செய்பவர்களுக்கு 3 சதவீத கேஷ்பேக்கும் (Cash Back) வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் ஆப்பிள் கார்ட் ஆனது தற்போது அமெரிக்காவில் மாத்திரமே காணப்படுகின்றது.

விரைவில் ஐக்கிய இராச்சியத்திலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்