ஸ்மார்ட் கைப்பேசிக்கு அடிமையானவர்களுக்காக கூகுள் அறிமுகம் செய்யும் Paper Phone

Report Print Givitharan Givitharan in மொபைல்

இன்று அதிகளவானவர்கள் ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கு அடிமையானவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

நவீன தொழில்நுட்பத்தினை எவ்வாறு சமநிலைப்படுத்தி பயன்படுத்துவது என்பது தொடர்பான விழிப்புணர்வு இன்மையால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

இவ்வாறானவர்களை இலக்குவைத்து Paper Phone எனும் தொழில்நுட்பத்தினை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்மூலம் விருப்பமான தொலைபேசி இலக்கங்கள், மேப்ஸ் போன்றவற்றினை நேரடியாக தாள் ஒன்றில் பிரிண்ட் செய்துகொள்ள முடியும்.

இதற்காக Paper Apps கூகுளால் தரப்பட்டிருக்கும். இவற்றின் ஊடாக மக்களுக்கு ஒவ்வொரு டாஸ்க் வழங்கப்படும்.

குறித்த டாஸ்க் செய்யப்படும் வரையில் வெறும் தாளினை மாத்திரமே பயன்படுத்த வேண்டியிருப்பதுடன், கைப்பேசிகள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும்.

தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் இவ் வசதியானது விரையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

gadgetsnow

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்