நான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் சீன நிறுவனமான Oppo புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

Oppo Reno 2 எனும் குறித்த கைப்பேசியானது இம் மாதம் 28 ஆம் திகதி அளவில் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இக் கைப்பேசியில் 4 பிரதான கமெராக்கள் தரப்பட்டுளள்ன.

அத்துடன் இவை 48 மெகாபிக்சல்களை உடையதாகவும், 20x Zoom கொண்டதாகவும் இருக்கின்றமை விசேட அம்சமாகும்.

இதற்கு முன்னர் கடந்த மே மாதம் Oppo Reno எனும் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இக் கைப்பேசியில் தரப்பட்டிருந்த கமெராக்கள் 10x Zoom கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்