கலக்ஸி 10 மற்றும் ஐபோன் 11 ஆகியவற்றிற்கிடையில் இப்படி ஒரு ஒற்றுமை

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இதேவேளை சாம்சுங் நிறுவனம் Galaxy S10, Note 10 ஆகிய இரு கைப்பேசிகளை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.

இப்படியான நிலையில் சாம்சுங் கைப்பேசிகளுக்கும் புதிதாக அறிமுகமாகவுள்ள ஐபோன்களுக்கும் இடையிலான ஒரு ஒற்றுமை தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி Galaxy S10, Note 10 கைப்பேசிகளைப் போன்று iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max ஆகியன OLED தொழில்நுட்பத்தினால் ஆன தொடுதிரையினைக் கொண்டவையாகும்.

எனினும் iPhone 11 கைப்பேசியானது LCD திரையினைக் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்