ஹுவாவி நிறுவனத்தின் உப நிறுவனமாக திகழும் Honor புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
Honor நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளில் Pop Up முறையிலான செல்ஃபி கமெரா தரப்பட்டிருக்கும்.
ஆனால் முதன்முறையாக குறித்த வகை கமெரா இன்றி சாதாரண செல்ஃபி கமெராவைக்கொண்ட கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
மேலும் எதிர்வரும் ஜீலை மாதம் 30ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள Honor 9X எனும் குறித்த கைப்பேசின் விலை 203 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை Honor 9X Max எனும் மற்றுமொரு கைப்பேசியினை எதிர்வரும் ஆகஸ்ட் 9ம் திகதி அறிமுகம் செய்கின்றது.
இதன் விலை 320 அமெரிக்க டொலர்கள் ஆகும்.