இவ் வருடம் ஆப்பிள் நிறுவனம் iPhone 11 எனும் தனது புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே காணப்படுகின்றன.
இந்நிலையில் புதிய ஐபோன்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இவற்றில் சில ஊகங்களின் அடிப்படையிலும் வெளியிடப்படுகின்றன.
இதன்படி இவ் வருடத்தில் இரு வகையான ஐபோன்கள் வெளிவரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவை இரண்டும் அளவில் மாறுபட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவை இரண்டினதும் திரைகளின் Resolution ஒரே அளவானதாக இருக்கும் எனவும், OLED தொழில்நுட்பத்தினால் ஆனது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகன்ற கோணப்பார்வை கொண்ட கமெராக்களையும் இக் கைப்பேசிகள் உள்ளடக்கியிருக்கும்.
அத்துடன் விரைவாக சார்ஜ் செய்வதற்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த Lightning இணைப்பான் இவ் வருடம் அறிமுகம் செய்யும் ஐபோன்களில் மாத்திரமே உள்ளடக்கப்பட்டிருக்கும் எனவும் அதன் பின்னர் அறிமுகம் செய்யும் ஐபோன்களில் தரப்படாது எனவும் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.