3D சென்சார் கமெராவுடன் அறிமுகமாகவுள்ள ஐபோன்கள்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தான் அறிமுகம் செய்யும் ஐபோன்களில் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இதன் வரிசையில் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ள ஐபோன்களில் முப்பரிமாண சென்சார் கொண்ட கமெராக்களை உள்ளடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத் தொழில்நுட்பமானது ToF 3D என அழைக்கப்படுகின்றது.

தனது பங்காளி நிறுவனம் ஒன்றிடம் இவ்வகை கமெராக்களை தயாரித்து வழங்குமாறு ஆப்பிள் நிறுவனம் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

காரணம் 2019 ஆம் ஆண்டிற்கான ஐபோன்கள் அறிமுகமாவதற்கு இன்றும் சில மாதங்கள் உள்ள நிலையில் அதன் பின்னரே மேற்கண்ட தகவல் தொடர்பான உறுதிப்படுத்தல்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers