தனது முதலாவது 5G ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Honor: எப்போது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஹுவாவி நிறுவனத்தின் உப நிறுவனமான Honor தனது முதலாவது 5G தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இவ் வருடத்தின் நான்காவது காலாண்டுப் பகுதியில் இக் கைப்பேசியினை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் ஷங்காயில் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் கொங்கிரஸ் நிகழ்வில் இக் கைப்பேசி தொடர்பான அறிவித்தலை தலைமை நிறைவேற்று அதிகாரியான George Zhai உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது இப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் சுமார் 100 மில்லியன் ஸ்மார்ட் கைப்பேசிகளை ஏற்றுமதி செய்வதற்கும் Honor நிறுவனம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்