ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் முதல் இடத்தை பிடிப்பதே இலக்கு: ஹுவாவி

Report Print Givitharan Givitharan in மொபைல்

உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து வழங்கும் நிறுவனங்களுள் சீனாவின் ஹுவாவி நிறுவனமும் ஒன்றாகும்.

இந் நிறுவனமானது தற்போது அமெரிக்காவின் வியாபார தடைகளை எதிர்நோக்கியுள்ளது.

எனினும் ஏனைய நாடுகளில் வீறுநடை போட்டு வருகின்றது.

இப்படியிருக்கையில் இந்த வருடத்தின் இறுதிக்குள் ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் முதல் இடத்தை பிடிப்பதே தமது இலக்கு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹுவாவி நிறுவனம் தற்போது நாள் ஒன்றுக்கு 500,000 முதல் 600,000 வரையான ஸ்மார்ட் கைப்பேசிகளை விற்பனை செய்து வருகின்றது.

அமெரிக்காவின் தடையை மீறி இந்த இலக்கினை எட்ட முடியும் என அந்நிறுவனத்தில் பணிபுரியும் சாகோ யாங் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers