தொலைபேசி அழைப்பிற்கான Video Ringtone உருவாக்குவது எப்படி என்று தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

தொலைபேசி அழைப்புக்களை வருகின்ற போது ஒவ்வொரு இலக்கங்களுக்கும் வெவ்வேறான ஆடியோ Ringtone வைக்கும் வசதி தற்போதைய கைப்பேசிகளில் காணப்படுகின்றது.

ஆனால் வீடியோ Ringtone வைக்கும் வசதி நேரடியாக கைப்பேசிகளில் தரப்படுவதில்லை.

எனினும் Vyng எனும் அப்பிளிக்கேஷன் இந்த வசதியினை தருகின்றது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது அன்ரோயிட் சாதனங்களில் மாத்திரமே செயற்படுகின்றது.

இதனால் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ள வீடியோ பாடல்களை வெவ்வேறு இலக்கங்களுக்கு என பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதில் Bollywood Hits, Movie Trailer, Classic Bollywood உட்பட ஏராளமான வகைகளில் வீடியோக்களை தெரிவு செய்ய முடியும்.

தவிர பயனர்களும் வீடியோக்களை பதிவு செய்து அதனை Ringtone ஆக வைக்க முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers