வெளியானது சாம்சுங் Galaxy M10 கைப்பேசியின் விலை

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனம் தனது இரு புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை இம் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் தற்போது இரு கைப்பேசிகளினதும் விலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samsung Galaxy M10 மற்றும் Samsung Galaxy M20 எனும் இரு கைப்பேசிகளே எதிர்வரும் 28 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இதில் 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்ட Samsung Galaxy M10 கைப்பேசியின் விலையானது 112 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்ற 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்ட Samsung Galaxy M10 கைப்பேசியின் விலை 133 டொலர்கள் ஆகும்.

இதுவேளை 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகத்தினை உடைய Galaxy M20 கைப்பேசியின் விலை 10,990 இந்திய ரூபாய்கள் ஆகவும், 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகத்தினை உடைய Galaxy M20 கைப்பேசியின் விலை 12,990 இந்திய ரூபாய்கள் ஆகவும் காணப்படுகின்றன.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்