Android, iOS இயங்குதளங்களுடன் கூடிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in மொபைல்

மைக்ரோசொப்ட் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் நோக்கியா நிறுவனத்தினை கொள்வனவு செய்து கைப்பேசிகளை அறிமுகம் செய்து வந்தது.

அதன் பின்னர் நோக்கிய எனும் பெயருக்கு பதிலாக மைக்ரோசொப்ட் பெயரில் கைப்பேசிகளை வடிவமைத்தது.

இக் கைப்பேசிகளில் விண்டோஸ் இயங்குதளத்தினை நிறுவி விற்பனை செய்தது.

எனினும் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெற்றிருக்கவில்லை.

தற்போது அன்ரோயிட் மற்றும் iOS கைப்பேசிகளுக்கே அதிக கிராக்கி காணப்படுகின்றது.

இதனால் எதிர்காலத்தில் அன்ரோயில் அல்லது iOS இயங்குதளத்துடன் கூடிய கைப்பேசிகளை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers