Nokia 9 கைப்பேசி தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்தன

Report Print Givitharan Givitharan in மொபைல்

அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து மீண்டும் கைப்பேசி சந்தையில் வேகமாக வளர்ச்சியை கண்டுவருகின்றது.

இவ்வாறான நிலையில் Nokia 9 புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த வருட ஆரம்பத்தில் அறிமுகம் செய்யவுள்ளது.

எனினும் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பாக நோக்கிய நிறுவனம் இதுவரை அறிவிக்காதபோதிலும் இணையத்தில் இது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

இதன்படி Penta Camera எனப்படும் 5 பிரதான கமெராக்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவை 41 மெகாபிக்சல்களை உடையவையாகவும் இருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் திரையானது 5.99 அங்குல அளவுடையதாக இருப்பதுடன், Octa Core Processor, பிரதான நினைவகமாக 8 GB RAM, 128 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டிருக்கும்.

மேலும் Android 9.0 Pie இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இக் கைப்பேசியின் விலையானது இந்திய பெறுமதியில் 50,700 ரூபா வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers