அறிமுகமாகியது Vivo Y93 ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

அற்புதமான வசதிகளுடன் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் Vivo நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Vivo Y93 இனை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.22 அங்குல அளவுடையதும், HD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான LCD திரையினைக் கொண்டுள்ளது.

இதில் MediaTek Helio P22 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.

தவிர 8 மெகாபிக்சல்களைக் கொண்ட செல்ஃபி கமெரா, 13 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்கள் உடைய டுவல் பிரதான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் டுவல் சிம் வசதியினையும் கொண்டுள்ள இக் கைப்பேசியில் நீடித்து உழைக்கக்கூடிய 4,030 mAh மின்கலம் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers