சாம்சுங் நிறுவனத்தின் 5G கைப்பேசி தொடர்பில் வெளியான புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஐந்தாம் தலைமுறை தொலைபேசி வலையமைப்பினைக் கொண்ட கைப்பேசிகளை அடுத்த வருடம் சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்வது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் Samsung Galaxy S10 கைப்பேசியாக அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் Samsung Galaxy S10 ஆனது 5G வலையமைப்பு மற்றும் 4G வலையமைப்பு என ஒன்றிற்கு மேற்பட்ட மொடல்களில் வெளியாகவுள்ளது.

இதன்படி 5G தொழில்நுட்பம் கொண்ட மொடலின் இலக்கமானது SM-G977 ஆக இருக்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தவிர Samsung Galaxy S10 Lite கைப்பேசியானது SM-G973F எனும் மொடல் இலக்கத்திலும், Galaxy S10 Plus ஆனது SM-G975F எனும் மொடல் இலக்கத்துடனும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers