ரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yandex ஆகும்.
இந்நிறுவனம் தற்போது கைப்பேசி உற்பத்தியிலும் காலடி பதித்துள்ளது.
இதன்படி கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
இக் கைப்பேசியானது 5.65 அங்குல அளவு, 2160 x 1080 Pixel Resolution உடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Qualcomm Snapdragon 630 Processor செயற்படக்கூடியதாகவும் இருக்கின்றது.
மேலும் 16 மெகாபிக்சல்கள் மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இதன் விலையானது 270 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.