16 லென்ஸ் கமெராவினைக் கொண்ட கைப்பேசியினை அறிமுகம் செய்யும் LG

Report Print Givitharan Givitharan in மொபைல்

தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளின் விற்பனையை தீர்மானிக்கும் சக்தியாக அவற்றில் தரப்படும் கமெராக்களும் திகழ்கின்றன.

கமெராக்களின் மெகாபிக்சல்கள் மற்றும் எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையிலும் ஒரு கைப்பேசியின் வினைத்திறன் பார்க்கப்படுகின்றது.

அண்மையில் ஆப்பிள் நிறுவனம்கூட டுவல் பிரதான கமெராக்களை அறிமுகம் செய்திருந்த நிலையில் சாம்சுங் நிறுவனம் 3 கமெராக்களை கொண்ட கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.

இவற்றுக்கு போட்டியாக LG நிறுவனம் 16 லென்ஸ்களை கொண்ட கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கு ஒரே ஒரு கமெரா காணப்படுகின்ற போதிலும் நான்கு நிரை, நான்கு நிரல்களில் மொத்தமாக 16 லென்ஸ்கள் தரப்பட்டிருக்கும்.

இக் கமெராவின் வினைத்திறனானது ஏனைய கமெராக்களுக்கு சவால் விடக்கூடிய வகையில் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers