வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்துகொள்ள உதவும் ஸ்மார்ட்போன்: ஆராய்ச்சி தகவல்

Report Print Kabilan in மொபைல்

ஸ்மார்ட்போன்களில் வெப்பநிலையை அறிந்து கொள்வதைப் பொன்று, வெள்ள பாதிப்புகளையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெள்ளம் மற்றும் இதர இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி கண்டறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், நான்கு ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் வைத்து, அவற்றின் Data-வை கொண்டு சூறாவளி போன்றவற்றை கணிக்க பயன்படுத்தப்பட்டது.

இவை கடலில் ஏற்படும் புயலுக்கு இணையானதாக கூறப்படுகிறது. அத்துடன் Weather signal எனும் செயலியும் இதில் பயன்படுத்தப்பட்டது. வானிலை அறிக்கையை ஸ்மார்ட்போன்கள் மூலம் அறிந்துகொள்வதைப் போல், வானிலை விவரங்களை Cloud செயலி மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த தகவல்களை வைத்து ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து, அங்குள்ள நபர்களுக்கு முன்கூட்டியே தகவல்களை வழங்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக மூத்த ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான காலின் பிரைஸ் கூறுகையில், ‘நம் ஸ்மார்ட்போன்களில் உள்ள Censor நம் சுற்றுச்சூழல் மற்றும் ஈர்ப்பு விசை, புவியின் காந்தபுலம், காற்றழுத்தம், வெப்பநிலைகள், ஒலி அளவுகள் மற்றும் பலவற்றை Track செய்து வருகிறது.

உலகம் முழுக்க சுமார் 300 முதல் 400 கோடி ஸ்மார்ட்போன்களில் இந்த தகவல்கள் பரவிக் கிடக்கின்றன. இந்த தகவல்களைக் கொண்டு, வானிலையை மிக துல்லியமாக Track செய்து மற்ற இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...