விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது Honor 10

Report Print Givitharan Givitharan in மொபைல்

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Huawei அண்மையில் Honor 10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசியானது உலகளவில் பலத்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.

கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கைப்பேசியானது இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அதாவது இதுவரை சுமார் உலகெங்கிலும் 3 மில்லியன் கைப்பேசிகள் விற்பனையாகியுள்ளன.

5.84 அங்கு அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியில் 24 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அத்துடன் 24 மெகாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்களை கொண்ட டுவல் பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers