Vivo நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக இம் மாதம் 12ம் திகதி அறிவித்துள்ளது.
சீனாவின் சங்ஹாய் பகுதியில் வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி Vivo NEX எனும் குறித்த கைப்பேசி விரைவில் அறிமுகமாகவுள்ளது.
இக் கைப்பேசியானது வழமையான ஸ்மார்ட் கைப்பேசிகளில் இருந்து சற்று வேறுபட்டதாக காணப்படுகின்றது.
அதாவது இதில் தரப்பட்டுள்ள செல்ஃபி கமெரா Pop Up முறையில் வெளியாகி படம்பிடிக்கக்கூடியது.
6.59 அங்குல அளவுடைய திரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியில் 5 மெகாபிக்சல்கள் மற்றும் 12 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராக்கள், 4000mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
இதன் விலையானது 702 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.