வாட்ஸ் ஆப் செயலியை இனி இந்த கைப்பேசிகளில் பயன்படுத்த முடியாதாம்

Report Print Givitharan Givitharan in மொபைல்
102Shares

மிகவும் பிரபல்யமான குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ் ஆப் விளங்குகின்றது.

புதிய அம்சங்கள் மற்றும் தவறுகள் நீக்கப்பட்டதாக இச் செயலியின் புதிய பதிப்புக்கள் அறிமுகம் செய்யப்பட்டும் வருகின்றது.

எனவே எதிர்காலத்தில் வரவுள்ள புதிய பதிப்புக்கள் சில வகையான கைப்பேசிகளில் செயற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி Nokia S40, அன்ரோயிட் 2.3.3 இற்று முன்னைய பதிப்பைக் கொண்ட கைப்பேசிகள், iPhone 3GS அல்லது iOS 6 இற்கு முன்னைய பதிப்பைக் கொண்ட கைப்பேசிகள், BlackBerry 10, Windows Phone 8.0 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசிகளிலும் செயற்படாது.

ஏற்கனவே சில வகையான கைப்பேசிகளில் வாட்ஸ் ஆப் செயற்படாதவாறு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்