ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கைப்பேசிகளுக்கு உலகளவில் தனி மதிப்பு உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இக் கைப்பேசியானது பல்வேறு பதிப்புக்களாக இன்று வரைக்கும் அறிமுகமாகிவருகின்றது.
இந்நிலையில் 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட iPhone 3GS கைப்பேசி மீண்டும் தென்கொரியாவில் விற்பனை செய்யப்படுகின்றது.
கைப்பேசி வலையமைப்பு சேவையினை வழங்கும் பிரபல நிறுவனமான SK Telink ஊடாகவே இக் கைப்பேசிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு தசாப்தம் ஆகின்ற போதிலும் இதுவரை பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கைப்பேசிகளை இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளன.
இவை ஒவ்வொன்றினதும் விலை 41 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.