உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது BlackBerry Key 2 கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

பிளாக்பெரி நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பின்னர் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

BlackBerry Key 2 எனும் இக் கைப்பேசியானது 649 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

இதன் சிறப்பம்சங்களாக 4.5 அங்குல அளவு, 1620 x 1080 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 660 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.

இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3050 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் இக் கைப்பேசியானது கூகுளின் Android 8.1 இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருக்கின்றமை விசேட அம்சமாகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers