வெறும் 10 நொடிகளில் விற்பனையாகி முடிந்த Nokia X6 கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
150Shares
150Shares
ibctamil.com

நோக்கியா நிறுவனம் Nokia X6 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது சீனாவில் வெறும் 10 நொடிகளில் விற்று தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் கைப்பேசிகளின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

இவ்வாறு சாதனை படைத்த குறித்த கைப்பேசியானது 5.8 அங்குல அளவுடையதும், 2280 x 1080 Pixel Resolution உடையதுமான FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Snapdragon 636 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இவற்றுடன் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்