பலரது வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்த உருவாகும் ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in மொபைல்
115Shares
115Shares
ibctamil.com

ஸ்மார்ட் கைப்பேசிகளை பொய் கண்டறியும் சாதனமாக மாற்றும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விசேட நெறிமுறை ஒன்றின் ஊடாக இதற்கான அப்பிளிக்கேஷன் உருவாக்கப்படவுள்ளது.

குறித்த அப்பிளிக்கேஷனை கைப்பேசியில் நிறுவியதும் கைப்பேசியினை ஒருவர் பயன்படுத்தும் விதத்தினை வைத்து அவர் நேர்மையானவரா அல்லது நேர்மையற்றவரா என கண்டறிந்துவிடும்.

இதற்கான முயற்சியில் Copenhagen பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Veritaps எனும் நெறிமுறையின் அடிப்படையிலேயே குறித்த அப்பிளிக்கேஷன் உருவாக்கப்படவுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஒருவர் உண்மையாக இருக்கும்போது பச்சை நிறத்தில் சரி அடையாளத்தினையும், உண்மைக்கு புறம்பாக இருக்கும் பட்சத்தில் சிவப்பு நிறத்தில் கேள்விக்குறி அடையாளத்தினையும் காண்பிக்கும்.

இதனால் பலரது வாழ்வில் குழப்பத்தை இந்த அப்பிளிகேஷன் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்