மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன்: அதிர்ச்சி தகவல்

Report Print Kabilan in மொபைல்

ஸ்மார்ட்போன் பயன்பாடுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள்.

135 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிக அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு தனிமை, கவலை, மன அழுத்தம் ஆகிய உணர்வுகள் அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையானால், முதலில் மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட தொடங்கும் என தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியாளர் பெப்பர் கூறுகையில், இது போன்ற மாணவர்கள் படிப்பது, வீடியோ பார்த்து உணவு உட்கொள்வது மற்றும் வகுப்புகளை கவனிக்கும் போது ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது என ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான தொடர் நடவடிக்கைகள், அவர்களின் உடல் மற்றும் மனதிற்கு தேவையான ஓய்வை வழங்க சிறிது நேரம் மட்டுமே வழங்கும். ஓய்வு குறைவாக இருப்பதால் அவர்களுக்கு பல நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இது போன்ற நடவடிக்கைகள் Semi-Tasking-க்கு வழி செய்யும்’ என தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன்களில் Push Notifications, Vibrations மற்றும் இதர Alerts ஸ்மார்ட்போன் திரையை அடிக்கடி பார்க்க வழி செய்கின்றன.

எனவே, ஸ்மார்ட்போன் பயன்பாடுகளை குறைக்க Push Notifications-ஐ Off செய்து வைக்கலாம். இதன் மூலம் மிக முக்கிய சேவைகளில் மட்டும் நேரத்தை செலவழிக்க முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers