பயனர்களை ஏமாற்றும் அன்ரோயிட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்கள்: அதிர்ச்சி தகவல்

Report Print Gokulan Gokulan in மொபைல்
188Shares
188Shares
ibctamil.com

அன்ரோயிட் கைபேசிகளில் தகவல்கள் பாதுகாக்கப்படுவதில்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு முன்னிணி ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்கின்றன.

இதேவேளை கூகுள் நிறுவனமும் மாதம்தோறும் தனது இயங்குதளத்திற்கான பாதுகாப்பு இணைப்பினை அறிமுகம் செய்து வருகின்றது.

இதனை நிறுவிக்கொள்வதற்கு பயனர் அனுமதி வழங்க வேண்டும்.

ஆனாலும் பயனர் இதனை நிறுவுவதை தவிர்த்தாலும் (Skip) குறித்த பாதுகாப்பு இணைப்பு நிறுவப்பட்டு விட்டதாக காண்பிக்கின்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இப் பிரச்சினையை ஜேர்மனியில் உள்ள Security Research Labs நிறுவனத்தில் பணியாற்றும் Karsten Nohl மற்றும் Jakob Lell என்பவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறான தவறுகளால் கைப்பேசியில் உள்ள தகவல்களுக்கான பாதுகாப்பு குறைவடையும் என எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பான சோதனைக்காக கூகுள் பிக்ஸெல் கைப்பேசி உட்பட சுமார் 1200 கைப்பேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்