Android Go இயங்குதளத்தினைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
57Shares
57Shares
ibctamil.com

Android Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட அன்ரோயிட் இயங்குதளத்தின் ஓர் பதிப்பாகும்.

இப்பதிப்பினைப் பயன்படுத்துவதற்கு மொபைல் சாதனங்களில் அதிக இட வசதி அவசியம் இல்லை என்பதே சிறப்பம்சமாகும்.

இந்த இயங்குதளத்தினைக் கொண்ட முதலாவது கைப்பேசியினை ZTE நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனை அமெரிக்காவில் முதன் முறையாக அறிமுகம் செய்கின்றது.

கைப்பேசியானது 5 அங்குல அளவு, 480 x 854 ரெசொலூசன் கொண்ட திரையினக் கொண்டுள்ளது. அத்துடன் பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 80 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்