Nokia 7 Plus கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின

Report Print Givitharan Givitharan in மொபைல்

நோக்கியா நிறுவனம் கடந்த வருடம் முதல் அறிமுகம் செய்துவரும் அன்ரோயிட் கைப்பேசிகளின் வரிசையில் Nokia 7 Plus எனும் மற்றுமொரு கைப்பேசியினை இவ் வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி Snapdragon 660 SoC Processor இனைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அன்ரோயிட் 8.0 ஓரியோ இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகவும் இருக்கின்றது.

Processor இன் வேகம் 1.84 GHz வேகம் உடையதாக காணப்படுகின்றது.

தவிர இதில் பிரதான நினைவகமாக 3 GB RAM தரப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் இறுதிப் பகுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியின் மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என நம்பப்பகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers