iCloud கடவுச் சொல் திருடப்படுவதை தடுக்க ஐபோன்களில் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் விரைவில் தனது மொபைல் சாதனங்களுக்கான iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பினையும், macOS இயங்குதளத்தின் புதிய பதிப்பினையும் அறிமுகம் செய்யவுள்ளது.

இப் பதிப்புக்களில் iCloud கடவுச் சொல் திருடப்படுவதை தவிர்க்க புதிய வசதி ஒன்றினை இணைக்கவுள்ளது. இதன்படி தனியுரிமை (Privacy Icon) ஐகான் ஒன்று தரப்படவுள்ளது.

இந்த ஐகான் ஆனது ஆப்பிள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட அப்பிளிக்கேஷன்களுக்கு மாத்திரம் தனிநபர் தகவல்கள் தேவைப்படின் தோன்றக்கூடியதாக உள்ளது.

அதேபோன்று போலியான தகவல்களின் ஊடாக iCloud கடவுச் சொல்லினை உட்புகுத்துமாறு கேட்கும் தருணங்களிலும் இந்த ஐகான் தோற்றமளிக்கும்.

இதனை அறிந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers