சாம்சுங் Galaxy S9 கைப்பேசியின் கமெராக்கள் தொடர்பான தகவல் வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஐபோன்களுக்கு நிகரான கைப்பேசிகளாக சாம்சுங்கின் Galaxy தொடரிலான கைப்பேசிகள் விளங்குகின்றன.

கடந்த வருடம் சாம்சுங் நிறுவனம் Galaxy S8 மற்றும் Galaxy S8 Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் இக் கைப்பேசிகள் அமோக வரவேற்பை பெற்றிருந்தன.

இந்நிலையில் இவ் வருடம் Galaxy S9 மற்றும் Galaxy S9 Plus எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இவற்றில் ISOCELL தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெராக்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதன் ஊடாக 480 Frames Per Second எனும் வேகத்தில் Full HD வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

அதேபோன்று 720 Pixel வீடியோக்களை 960 Frames Per Second எனும் வேகத்திலும் பதிவு செய்யக்கூடியது.

இந்த வேகமானது தற்போதுள்ள கைப்பேசிகளிலுள்ள கமெராக்களின் வேகத்திலும் பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers