நோக்கியா நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இவற்றில் Nokia 2, 3, 5, 6, 7, 8 ஆகிய கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் நோக்கியா 9 ஆனது விரைவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் நோக்கியா 1 கைப்பேசி உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் இக் கைப்பேசியும் ஒரு அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டதாக வெளிவரவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதில் பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பன உள்ளடக்கப்படும் என தெரிகின்றது.
தவிர இதன் விலையானது 86 டொலர்கள் வரை இருக்கும் எனவும் நம்பப்படுகின்றது.