சாம்சுங் Galaxy Note 8 கைப்பேசியிலும் தொடர்கதையாகும் மின்கலப் பிரச்சினை

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தும் மின்கலங்கள் பொதுவாக நீண்ட நேரம் மின்சக்தியை வழங்குவதில்லை.

இப்படியான நிலையில் குறித்த மின்கலங்கள் வெப்பமடைவது, வெடிப்பது என பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

இதனால் சில வகையான கைப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் அச்சப்படுகின்ற நிலைமை தோன்றியுள்ளது.

இதே போன்றே அண்மையில் சாம்சுங் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Galaxy Note 8 கைப்பேசியின் மின்கலங்களிலும் குறைபாடுகள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த மின்கலங்கள் சரியான முறையில் சார்ஜ் ஆகாமை மற்றும் அம் மின்கலங்களைப் பயன்படுத்தி கைப்பேசிகளை இயக்க முடியாமை போன்ற பிரச்சினைகள் இருப்பதாக உயரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

மின்கலங்களில் உள்ள சார்ஜ் பூச்சிய நிலையை அடைந்து பின்னர் மீண்டும் சார்ஜ் செய்யும்போதே சார்ஜ் ஆகாத தன்மை காணப்படுகின்றது.

அமெரிக்க வாழ் Galaxy Note 8 உரிமையாளர்களே அதிகம் இப் பிரச்சினைகள் தொடர்பில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்