Face ID தொழில்நுட்பத்தால் iPhone X கைப்பேசிகளில் புதிய பிரச்சினை

Report Print Givitharan Givitharan in மொபைல்

iPhone X ஸ்மார்ட் கைப்பேசி பயன்படுத்தும் வாடிக்கையளர்களின் எண்ணிக்கை கிடு கிடுவென அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.

எனினும் இதில் தரப்பட்டுள்ள Face ID தொழில்நுட்பத்தில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றமை தொடர்பில் ஏற்கணவே எச்சரிக்கைகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் ஒன்லைன் ஊடாக பொருட்கள் கொள்வனவினை மேற்கொள்வதிலும் புதிய சிக்கல் தோன்றியுள்ளது.

Ask to Buy எனும் உறுதிப்படுத்தல் வசதியின் போது Face ID இற்கு பதிலாக கடவுச் சொல்லை உள்ளீடு செய்யுமாறு கேட்கப்படுகின்றது.

இதனால் குடும்பத்தில் உள்ள சிறியவர்கள் ஒன்லைன் சொப்பிங் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் Touch ID தொழில்நுட்பம் தரப்பட்டிருக்கையில் சிறுவர்கள் கொள்வனவு மற்றும் தரவிறக்கம் செய்யும் சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் விரல் அடையாளத்தினை பதிவு செய்ய வேண்டியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்