பாதுகாப்பு அப்டேட்கள் இனி இல்லை: பிளாக்பெரியின் அதிரடி அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in மொபைல்
80Shares

பிளாக்பெரி தனது முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Priv-கான பாதுகாப்பு அப்டேட்கள் இனி வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.

எனவே Priv அல்லது பிளாக்பெரி 10 சாதனம் பயன்படுத்துவோர் பிளாக்பெரி கீ ஒன் சாதனத்திற்கு மாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, இதற்காக கீ ஒன் சாதனத்தின் விலையில் தள்ளுபடி வழங்கவும் பிளாக்பெரி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Priv சாதனம் வைத்திருப்போருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அதில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் பட்சத்தில் மென்பொருள் அப்டேட் மூலம் அவை சரி செய்யப்படும் என தன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பிளாக்பெரி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Priv சாதனத்திற்கு வழங்கப்பட்ட வாரண்டியில் எவ்வித மாற்றமும் இருக்காது, அது இறுதி வரை பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்